
தூத்துக்குடி தபால் தந்தி காலனி சேர்ந்தவர் சாகுல் ஹமீது ( 46 ). இவர் மடத்தூரில் இருந்து சோரிஸ்புரம் செல்லும் சாலையில் துரைக்கனி நகரில் லாரி செட் வைத்துள்ளார்.
கடந்த 20ஆம் தேதி இவரது அலுவலகத்தில் இருந்த நான்கு பேட்டரிகள், ஆறு ஜாக்கிகள் திருடு போனது. இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ஆகும். இது குறித்து தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சைரஸ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில் துரைக்கனி நகரைச் சேர்ந்த வாழாவெட்டி முத்து மகன் டிரைவரான நவீன் சிவா ( 25 ) மற்றும் 16 வயது இளம் சிறார் ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் சிப்காட் போலீசார் கைது செய்தனர். பேட்டரி மற்றும் ஜாக்கிகளை பறிமுதல் செய்தனர்.