• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட அண்ணன் தம்பி கைது!

  • Share on

தூத்துக்குடி அருகே டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட அண்ணன் தம்பியை போலீசார் கைது செய்தனர்.


தூத்துக்குடி அருகே உள்ள தட்டப்பாறையை அடுத்த சிலுக்கன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன் ( 42 ) டிரைவரான இவர், நேற்று தட்டப்பறை விலக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மர்ம நபர்கள் இருவர் வழிமறித்து கத்தியை கட்டி மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.


அதில் முடிவைத்தானேந்தல் யாதவர் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துமாலை ( 25 ) அவரது தம்பி  பார்வதி ராஜா ( 24 ) ஆகியோர் கத்தியை காட்டி விரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. இதனை அடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • Share on

மாமனாரை கொலை செய்த மருகனுக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

ஓட்டப்பிடாரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை : தந்தை கைது!

  • Share on