• vilasalnews@gmail.com

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி!

  • Share on

நாடு முழுவதும் பாஜகவில் உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. அந்த வகையில் பாஜகவில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்களை நியமித்து அந்த கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. 


பாஜகவில் தேசிய தலைவர், மாநில தலைவர், மாவட்ட தலைவர்களின் பதவிக்காலம் என்பது 3 ஆண்டுகளாக உள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முறை வேண்டுமானால் அவர்களின் பதவிக்காலம் என்பது நீட்டிப்பு செய்யப்படும்.


இல்லாவிட்டால் புதிய தலைவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இதற்கிடையே தான், தற்போது நாடு முழுவதும் பாஜகவில் உள்கட்சி தேர்தல் என்பது நடைபெற்று வருகிறது. விரைவில் தேசிய தலைவர் பதவிக்கும் தேர்தல் என்பது நடத்தப்பட உள்ளது.


அந்த வகையில், தமிழக பாஜகவில் கடந்த செப்டம்பர் மாதம் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தொடங்கப்பட்டது. இதையடுத்து, உட்கட்சித் தேர்தல் தொடங்கியது. அதில், கிளை தலைவர், மண்டல தலைவர், மாவட்ட தலைவர் என பல்வேறு பதவிகளுக்கு வாக்குப்பதிவு அடிப்படையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 


இதற்கிடையே, தமிழக பாரதிய ஜனதா கட்சி அமைப்பு ரீதியாக 67 மாவட்டங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 33 மாவட்ட தலைவர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் 34 மாவட்ட தலைவர்களுக்கான அறிவிப்பு இன்னும் வெளியிடவில்லை. இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.


தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவராக இருந்த வெங்கடேசன் சென்ன கேசவன் பதிலாக, புதிய தலைவராக சரவண கிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து கோவில்பட்டி மாவட்ட பாஜக அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மாநில செயற்குழு உறுப்பினர் போத்தீஸ் ராமமூர்த்தி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 


இதற்கிடையே தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் பதவியை கைப்பற்ற கட்சி நிர்வாகிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் யார் என்று அக்கட்சியினரிடையே மிகுந்த எதிர்பார்ப்பை தந்துள்ளது.


தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் பதவியை கைப்பற்ற தற்போதைய மாவட்ட தலைவர் சித்ராங்கதன், பாஜக மகளிரணி மாநில பொதுச்செயலாளர் நெல்லையம்மாள், தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருக ஆதித்தன், பொருளாதாரப் பிரிவு மாநிலச் செயலாளர் விஎஸ்ஆர் பிரபு, விருந்தோம்பல் பிரிவு மாநிலச் செயலாளர் பாலமுருகன், கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு, அப்போது 63 ஆயிரத்து 11 வாக்குகள் பெற்று, பின்னர் கடந்த 2022 ஆம் ஆண்டு தன்னை பாஜக வில் இணைத்துக்கொண்ட தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை சேர்ந்த கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த வரிசையில் முன்னாள் எம்பி சசிகலா புஷ்பாவும் உள்ளார் என்பது குறிப்பிட தக்கது. இதனால் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே அதிகரித்துள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு : 2 பேர் கைது!

மாமனாரை கொலை செய்த மருகனுக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

  • Share on