• vilasalnews@gmail.com

காவல் துறையினரிடையே கிரிக்கெட் போட்டி : தூத்துக்குடி நகர உட்கோட்ட அணி முதலிடம்!

  • Share on

தூத்துக்குடியில் காவல்துறையினருக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் கோப்பை வழங்கி பாராட்டினார்.


பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை சார்பாக ஆயுதப்படை மற்றும் அனைத்து உட்கோட்ட காவல்துறையினருக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதன்படி, அரை இறுதிப் போட்டிக்கு தகுதியான தூத்துக்குடி நகரம் மற்றும் சாத்தான்குளம் உட்கோட்ட காவல்துறை அணியினருக்கிடையே நடைபெற்ற போட்டியில் தூத்துக்குடி நகர உட்கோட்ட அணியினர் வெற்றி பெற்றும், ஆயுதப்படை-II மற்றும் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட அணியினருக்கிடையே நடைபெற்ற போட்டியில் ஆயுதப்படை-II அணியினரும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.


மேற்படி, தூத்துக்குடி நகரம் மற்றும் ஆயுதப்படை-II அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியை இன்று (20.01.2025) மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான்  துவக்கி வைத்து வெற்றி பெற வாழ்த்தினார். பின்னர் மேற்படி போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி நகர உட்கோட்ட அணியினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பரிசுகோப்பை வழங்கி பாராட்டினார். 


இந்நிகழ்வின் போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனைமுருகன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

  • Share on

தூத்துக்குடி அருகே தனியார் அனல் மின் நிலையத்தில் விபத்து : 3 தொழிலாளர்கள் காயம்!

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு : 2 பேர் கைது!

  • Share on