• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே தனியார் அனல் மின் நிலையத்தில் விபத்து : 3 தொழிலாளர்கள் காயம்!

  • Share on

தூத்துக்குடி அருகே மேலமருதூரில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் மூன்று தொழிலாளர்கள் காயமடைந்தனர்.


தூத்துக்குடி அருகே  மேலமருதூரில் 600 மெகாவட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 2 அலகுடன் கூடிய தனியார் அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.


அங்கு கொதிகலனை தண்ணீர் கொண்டு குளிர்விக்கும் போது வெளியேறும் வெப்பக்காற்று தனியாக குழாய் வழியாக வெளியில் கொண்டு செல்லப்படும். இந்த குழாயில் நேற்று காலை எதிர்பாராத விதமாக திடீரென ஓட்டை விழுந்து அதிக அழுத்தத்துடன் வெப்பக் காட்சி வெளியேறி உள்ளது. 


அப்போது அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த எப்போதும் என்றான் கண்ணகட்டையைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் ஆறுமுகக்கனி ( 32 ), கருங்குளம் பாரதியார் வடக்கு தெருவை சேர்ந்த சண்முகம் மகன் சங்கர சுப்பு ( 41 ), தூத்துக்குடி வள்ளிநாயகபுரத்தைச் சேர்ந்த அன்புராஜ் ( 36 ) ஆகிய மூன்று பேர் மீதும் வெப்ப காற்றப்பட்டுள்ளது. 


இதில் மூன்று பேர் உடலிலும் காயம் ஏற்பட்டது. உடனடியாக மூன்று பேரையும் சிகிச்சைக்காக தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தருவைகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது : மாநகராட்சி ஆணையர் தகவல்!

காவல் துறையினரிடையே கிரிக்கெட் போட்டி : தூத்துக்குடி நகர உட்கோட்ட அணி முதலிடம்!

  • Share on