
ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், மணியாச்சி முதல் ஒட்டநத்தம் வரை 3 கிலோ மீட்டர் வரை நெடுஞ்சாலைத்துறை கிராம சாலைகள் சிறப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பணிபுரியும் மக்களை சந்தித்து கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து குறைகளை கேட்டறிந்தார்கள்.
இதில் முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் சுரேஷ் குமார், உதவி பொறியாளர் திலிப்குமார், மின்வாரிய உதவி பொறியாளர் பால் முனியசாமி, ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார், ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன், ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் காமினி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜயபாண்டி, சரிதா கண்ணன், ஊராட்சி செயலர் முத்துலட்சுமி, இளைஞரணி மாரிகுமார், கிளை செயலாளர்கள் ஆறுமுகராஜா, ஜான், நல்லசாமி, முருகன், சமூக ஆர்வலர் அதியசமணி மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.