• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் உண்ணாவிரத போராட்டம்!

  • Share on

தூத்துக்குடியில், பணியில் இருந்து நீக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணி அமர்த்த கோருதல் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பாக நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெறுகிறது. இதனையடுத்து, பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பாக, தூத்துக்குடி மாவட்ட பிஎஸ்என்எல் தொலைபேசி நிலைய வளாகத்தில் வைத்து 18.02.2021 (வியாழக்கிழமை) மாவட்ட தலைவர் ஜெயமுருகன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

ஒவ்வொரு மாதமும் உரிய தேதியில் சம்பளம் வழங்கிட வேண்டும். பணியிலிருந்து நீக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனடியாக பணிவழங்கிட வேண்டும். கருணை அடிப்படையிலானா பணிநியமன தடையை நீக்க வேண்டும். DOT வழிகாட்டுதல்படி ஊதிய பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன 

இப்போராட்டத்தில்,மாவட்ட செயலாளர் பன்னிர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் பால்ராஜ், பட்டுக்குமார், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக மணிவண்ணன் நியமனம்

மீண்டும் வர வேண்டும் எங்கள் மாவட்டத்திற்கே!

  • Share on