
குளத்தூர் அருகே தீ விபத்தில் காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, குளத்தூர் அருகே உள்ள பூசனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் மனைவி சண்முகத்தாய் ( 56 ) இவர் கடந்த 8ஆம் தேதி அதிகாலை டீ போடுவதற்காக வீட்டின் சமையலறையில் உள்ள காஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார்.
அப்போது ஏற்கனவே சிலிண்டரில் இருந்து காஸ் கசிந்து சமையலறை முழுவதும் பரவி இருந்ததால் சண்முகத்தை மீது தீ பற்றி எரிந்துள்ளது. உடனே அதை பார்த்து அவரது மகன் முத்து, சண்முகத்தாய் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்துள்ளார். பின்னர் சண்முகத்தை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் சண்முகத்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்