
மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் எம்ஜிஆரின் திருஉருவச் சிலைக்கு தூத்துக்குடி மாநகர் அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வர் எம்.ஜி.ஆரின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் பிரைட்டர் தலைமையில், மகளிரணி துணைச்செயலாளர் சண்முககுமாரி, எம்ஜிஆர் மன்ற செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில்,
தூத்துக்குடி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், இன்று ( 17.01.2025) காலை தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்களுக்கு கேக் வழங்கப்பட்டது.
மாவட்ட அவைத் தலைவர் தங்க மாரியப்பன், மாவட்ட துணைச்செயலாளர் முனியசாமி, பொதுக்குழு உறுப்பினர் ராமேஸ்வரி, இளைஞர் பாசறை செயலாளர் மருது பாண்டி, சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் இன்னாசி, இளம்பெண்கள் பாசறை செயலாளர் அன்னலட்சுமி, இலக்கிய அணி செயலாளர் வீரபுத்திரன், சுற்று சூழல்பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர் தாமஸ் ஜோவர்
எம்ஜிஆர் மன்ற தலைவர் முத்துமாலை, மாணவரணி தலைவர் அசோக் குமார், அம்மாதொழிற்சங்க பேரவை இணைச்செயலாளர் அகஸ்டின், போல்பேட்டை பகுதி செயலாளர் தாவீது, முத்தையாபுரம் பகுதி செயலாளர் மதன்குமார், சண்முகபுரம்பகுதி செயலாளர் முத்துச்செல்வம், திரேஸ்புரம் பகுதி அவைத்தலைவர் பாஸ்கர், முத்தையாபுரம் பகுதி அவைத்தலைவர் செல்லத்துரை, வட்ட செயலாளர்கள் செல்வராஜ், ரவிக்குமார், பவுல்ராஜ் , மோட்சையா, ஐயப்பன், முத்துசாமி , ரொபின்டோ , சேகர், PRSபாண்டியன், ஆறுமுகம், நீதி ராஜன் மற்றும் அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்