
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் வேப்ப மரங்கள் நடுவதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஆலோசனை வழங்கினார்.
விளாத்திகுளம் மரங்கள் மக்கள் இயக்கம் அலுவலகத்தில் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட சமூக ஆர்வலர்களின் மூலம் குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் மூலமாக விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் வேப்ப மரங்கள் நடுவதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஆலோசனை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மரங்கள் மக்கள் இயக்கம் நிர்வாக இயக்குனர் ராகவன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், சமூக ஆர்வலர்கள் இளையராஜா மாரியப்பன், ஜீவானந்தம், பொன்பாண்டியன், போத்தீஸ் ராகவன், சித்துராஜ், மகேஷ், செல்லப் பாண்டியன், வார்டு உறுப்பினர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.