
தூத்துக்குடியில் வருகிற 27ஆம் தேதி வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
இதுகுறித்து நெல்லை வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் ( நிலை 1 ) விகாஸ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீடு கழகம் இணைந்து நடத்தும் வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் 2.0 நிகழ்ச்சி ஜனவரி 27ஆம் தேதி அன்று அனைத்து மாவட்டங்களிலும் நடக்கிறது. இத்திட்டம் வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளர் அரசு காப்பீடு கழகத்தின் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோரின் குறைகள் தீர்க்கும் மற்றும் சேவை வழங்கும் தளமாகவும், தகவல் பரிமாற்ற அமைப்பாகவும் செயல்படும்.
வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் 2.0 நிகழ்ச்சி ஜனவரி 27 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று காலை 9 மணி முதல் தூத்துக்குடி பானு பிருந்தாவன் கிரீன் பார்க் ஹோட்டல் நடக்கிறது.
வருங்கால வைப்பு நிதி மற்றும் இஎஸ்ஐ சார்ந்த உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், தொழில் நிறுவன அமைப்புகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.