
விளாத்திகுளம் அருகே அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியதாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, வைப்பார் பாலம் முட்காட்டில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து சேவல் ஆர்வலர்கள் கூடினர். அவர்கள் தங்கள் சேவல் கால்களில் கூர்மையான கத்தியை கட்டி சேவல் சண்டை போட்டிகளில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த குளத்தூர் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜா தலைமையிலான போலீசார் விரைந்து சேவல் போட்டி நடந்த இடத்திற்குச் சென்றதும், அங்கிருந்தவர்கள் தப்பி ஓடினர். அப்போது போலீசார் விரட்டிச் சென்று 7 சேவல்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் 7 பேரை கைது செய்தனர்.