• vilasalnews@gmail.com

ஜெ., பிறந்தநாள் : எட்டையபுரத்தில் களை கட்டும் சுவர்விளம்பரம்!

  • Share on

மறைந்த தமிழ்நாடு முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்து, அதற்கான வேலைகளை இப்போதே செய்து வருகிறார்கள் எட்டையபுரம் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார். ஒரு மாதங்களுக்கு உள்ள நிலையில், எட்டயபுரத்தில் அதற்கான ஏற்பாடுகள் இப்போதே களைகட்ட தொடங்கிவிட்டன.


தமிழ்நாடு மட்டும் இன்றி இந்திய அரசியலிலும் தவிர்க்க முடியாத சகாப்தமாக திகழ்ந்தவர் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா. அவரின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளால் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.


அந்தவகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அரசியல் ரீதியாக மிகவும் ஆக்டிவாக இருப்பவர் எட்டையபுரம் அதிமுக நகரச்செயலாளர் ராஜகுமார். இவர் கட்சி கூட்டங்கள் மற்றும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா என எது செய்தாலும் மிகவும் பிரம்மாண்டமான முறையிலேயே செய்வார். அதன் ஒரு பகுதியாக ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கான கோலப்பட்டி நடத்தி டிவி, குளிர்சாதனப்பெட்டி, வாசிங்மிசின், சில்வர் குடம், சேலை என பரிசுப்பொருட்களை மழைபோல் பொழிந்து வழங்குவார்.


அந்தவகையில், இந்த ஆண்டும் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கான மெகா கோலப்பட்டி நடத்தி தங்க செயின், டிவி, குளிர்சாதனப்பெட்டி, வாசிங்மிசின் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசுப்பொருட்களை வழங்க உள்ளாராம். மேலும், ஜெயலலிதாவின் பிறந்த நாளை எட்டையபுரத்தில் சிறப்பாக கொண்டாடும் விதமாக அதற்கான வேலைகளை இப்போதே செய்து வருகிறார்கள் எட்டையபுரம் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார். ஒரு மாதங்களுக்கு உள்ள நிலையில், எட்டயபுரத்தில் அதற்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக ஜெயலலிதாவின் பிறந்தநாள் சுவர் விளம்பரங்கள் ஆங்காங்கே வரைந்து இப்போதே பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை களைகட்ட செய்யும் விதமாக தனது பணியை தொடங்கி விட்டார் எட்டையபுரம் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார்.

  • Share on

மாட்டு வண்டி ஓட்டி மாஸ் காட்டிய விளாத்திகுளம் எம்எல்ஏ!

  • Share on