• vilasalnews@gmail.com

மாட்டு வண்டி ஓட்டி மாஸ் காட்டிய விளாத்திகுளம் எம்எல்ஏ!

  • Share on

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாய் இருக்கும் காளைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மார்கண்டேயன் எம்எல்ஏ தனது குடும்பத்துடன் மாட்டுப் பொங்கல் விழாவை கொண்டாடினார்.


தமிழர் திருநாள் என்று போற்றப்படும் பொங்கல் பண்டிகை  உலகத் தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தை பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உழவுத் தொழிலுக்கு உறுதுணையாய் இருக்கும் காளைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.


மக்கள் தங்கள் வாழ்வில் குடும்ப உறுப்பினர்களை போல் வாழும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மாட்டுப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.


இந்த நிலையில், விளாத்திகுளத்தில் உள்ள தனது அம்பாள் கோசாலையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, உழவுத் தொழிலுக்கு உறுதுணையாய் இருக்கும் காளைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மார்கண்டேயன் எம்எல்ஏ தனது குடும்பத்துடன் மாட்டுப் பொங்கல் விழாவை கொண்டாடினார். தொடார்ந்து தனது மனைவி மற்றும் மகனுடன் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் காளைகள் பூட்டிய மாட்டு வண்டியை ஓட்டி வலம் வந்து மகிழ்ந்தார்.

  • Share on

மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம் சார்பில் 40ம் ஆண்டு பொங்கல் சமுதாயப்பணி!

ஜெ., பிறந்தநாள் : எட்டையபுரத்தில் களை கட்டும் சுவர்விளம்பரம்!

  • Share on