• vilasalnews@gmail.com

மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம் சார்பில் 40ம் ஆண்டு பொங்கல் சமுதாயப்பணி!

  • Share on

தூத்துக்குடியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் ஆதரவற்றோர் இல்லங்களில் 40ம் ஆண்டு பொங்கல் சமுதாயப் பணி நடைபெற்றது.


தூத்துக்குடியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்மிகு பங்காரு அம்மா அவர்களின் அருளாசியுடன் 40-ம் ஆண்டு பொங்கல் சமுதாயப்பணிப் பணி ஆன்மிக இயக்கம் சார்பில் நடைபெற்றது. தூத்துக்குடி 3ம் மைல் திருவிக நகர் சக்தி பீடத்தில் விவசாயம் செழிக்க வேண்டி 1008 குங்கும அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு மற்றும் குரு பீடத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பூஜையை சக்திபீட தலைவர் சக்திமுருகன் தொடங்கி வைத்தார்.


இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரையண்ட் நேசக்கரங்கள் இல்லம், ஹில் சேரிட்டி முதியோர் இல்லம், சின்னக்கண்ணுபுரம் லூசியா மாற்றுத்திறனாளிகள் பள்ளி, லூசியா பார்வையற்றோர் குடியிருப்பு, கூட்டாம்புளி அன்பு உள்ளங்கள், ராஜீவ்நகர் அன்னை கருணை இல்லம், கதிர்வேல் நகர் ஆன்மாவின் உள்ளங்கள், பாசக்கரங்கள் முதியோர் இல்லம், பால்பாண்டி நகர் நியு நேசக்கரங்கள், ஆரோக்கியபுரம் தொழுநோய் இல்லம், கீழ அழகாபுரி பார்வையற்ற பெண்கள் இல்லம், ட்ரூத்புல் மனநல காப்பகம், மெர்சி பார்வையற்றோர் இல்லம், நரிக்குறவர் குடியிருப்புகள் மற்றும் தெருவோர ஏழை மக்கள் உள்ளிட்ட 1,200 பேருக்கு பொங்கல், கரும்பு, பனங்கிழங்கு மற்றும் புத்தாடைகள், வேஷ்டி சேலைகள், போர்வைகள் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில், திருவிக நகர் சக்தி பீட துணைத்தலைவர் திருஞானம், தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர் கோபிநாத், சிதம்பரநகர் மன்ற பொறுப்பாளர் கணேசன், சித்த மருத்துவர் வேம்பு கிருஷ்ணன், புதிய துறைமுகம் மன்ற பொறுப்பாளர் தனபால், மகளிர் அணி பத்மாவதி, ஆன்மிக இளைஞர் அணி பொறுப்பாளர் பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

ரேக்ளா ரேஸ் வண்டியில் தூத்துக்குடி எஸ்பி... ஆளே மாறிட்டாரே!

  • Share on