• vilasalnews@gmail.com

ரேக்ளா ரேஸ் வண்டியில் தூத்துக்குடி எஸ்பி... ஆளே மாறிட்டாரே!

  • Share on

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து, ரேக்ளா ரேஸ் வண்டியில் வந்து பொதுமக்கள் மற்றும் காவலர்கள் இணைந்து பல்வேறு விளையாட்டுகளை நடத்தி பொங்கல் பண்டிகையை  சிறப்பாக கொண்டாடினர்.


தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உற்சாகமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டது. இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் தூத்துக்குடியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.


இதற்காக, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வருகை தந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரேக்ளா ரேஸ் மாட்டு வண்டியில் ஏறி உற்சாகமாக வந்தார். அப்போது அங்கிருந்த பெண் காவலர்கள் மலர் தூவியும் மாணவர்கள் சிலம்பாட்டம் சுற்றி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.


இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புத்தாடை அணிந்து வந்திருந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் காவல்துறையினர் குடும்பத்தினர் மற்றும் மும்மத குருக்கள் சமத்துவ பொங்கல் வைத்து பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.


தொடர்ந்து நடைபெற்ற காவல்துறையினருக்கான கைப்பந்து, கபடி, காவலர்களின் குழந்தைகளுக்கான பாட்டிலில் நீர் நிரப்பும் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. இதில் நகர உதவி காவல் கண்காணிப்பாளர் மதன், ஊரகப்பகுதி துணை கண்காணிப்பாளர் சுதிர், ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அலிம், பங்குத்தந்தை சந்தியாகு ஆயுதப்படை ஆய்வாளர் சுனை முருகன், தனிப்பிரிவு ஆய்வாளர் உமையொரு பாகம் மற்றும் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி டூ சென்னைக்கு சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம் சார்பில் 40ம் ஆண்டு பொங்கல் சமுதாயப்பணி!

  • Share on