• vilasalnews@gmail.com

குற்றங்களை தடுக்க எடுத்த முயற்சி... கூப்பிட்டு பாராட்டிய தூத்துக்குடி எஸ்பி!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில்  ஆழ்வார்கற்குளம் மற்றும் கோவங்காடு பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டு புதிதாக 56 சி.சிடி.வி கேமராக்களை நிறுவிய அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்  பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆழ்வார்கற்குளம் பகுதியில் குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டு ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக 24 சிசிடிவி கேமராக்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.


அதேபோன்று கோவங்காடு பகுதியில் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் இணைந்து அப்பகுதியில் புதியதாக 32 சிசிடிவி கேமராக்கள் புதிதாக நிறுவியுள்ளனர்.


மேற்படி ஆழ்வார்கற்குளம் மற்றும் கோவங்காடு பகுதி ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து தங்கள் பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டு காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து மொத்தம் 56 சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளனர். இச்செயலைப் பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்  இன்று (13.01.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் மேற்படி ஆழ்வார் கற்குளம் மற்றும் கோவங்கள் ஆகிய ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக 13 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

  • Share on

தூத்துக்குடி மக்களுக்கு பல புதிய அப்டேட் கொடுத்த மேயா் ஜெகன் பெரியசாமி!

தமிழ் சமூகத்தின் பேராதரவோடு 5 ஆம் ஆண்டில் விளாசல் நியூஸ்!!

  • Share on