புதூர் பாண்டியாபுரத்தில் இருந்து வெள்ளப்பட்டி செல்லக்கூடிய சாலையை சீரமைக்க தமிழக வெற்றிக் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, புதூர் பாண்டியாபுரத்தில் இருந்து கிழக்காக வெள்ளப்பட்டி செல்லும் சாலையானது மிகவும் குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்று ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஆகவே, அந்த சாலையை போர்கால அடிப்படையில் சரி செய்து தருமாறு ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சார்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
இதில் தவெக நிர்வாகிகளான, நிஷாந்த், தமிழன் கார்த்திக், ஆறுமுகவேல், மணிகண்டன், முருகன், ஜெசிந்தா, ஸ்டெல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.