• vilasalnews@gmail.com

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அள்ள அள்ள தங்கம்... குவிந்த கோடிகள்..வியக்கும் பக்தர்கள்!

  • Share on

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இரண்டு நாட்கள் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில், 4.71 கோடி ரூபாய் பணம், 1,603 கிராம் தங்கம், 52,230 கிராம் வெள்ளி மற்றும் 1,117 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளது.


ஆறுபடை வீடுகளும் கொண்ட தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் 2வது படை வீடு திருச்செந்தூர். இவை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரின் கடற்கரை ஓரத்தில் அமைந்திருக்கிறது முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான இந்த திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்.  உலக பிரசித்தி பெற்றது. 


தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை வழிபட திருச்செந்தூருக்கு வருகை தருவார்கள்.


அதுவும் கார்த்திகை, மார்கழி மாதம் வந்துவிட்டால் ஐயப்பன் பக்தர்கள் கோவிலில் வந்து குவிவார்கள். அப்படி கோவிலுக்கு வரும் பக்தர்கள் நினைத்த காரியம் நிறைவேறினோலோ அல்லது ஏதாவது வேண்டுதல் இருந்தாலோ உண்டியல்களில் பணம், நகை, தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துவது பக்தர்களின் வழக்கம்.


இந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள உண்டியல்களில் சேர்ந்த காணிக்கை பணத்தை எண்ணும் பணிகள் கடந்த 2 நாட்களாக நடந்து வந்தது. அதில், 4 கோடியே 71 லட்சத்து 90 ஆயிரத்து 172 ரூபாய் உண்டியல் வருவாய் வசூலாகியுள்ளது.


மேலும், 1,603 கிராம் தங்க பொருட்களும், 52,230 கிராம் வெள்ளியும், 1 லட்சத்து 19 ஆயிரம் கிராம் பித்தளையும் காணிக்கையாக பக்தர்களால் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல 1,117 வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share on

தூத்துக்குடியில் மாயமான மீனவரை மீட்டு தரக் கோரி உறவினர்கள் மறியல் முயற்சி!

திருச்செந்தூர் கடற்கரையில் கிடைத்த 200 வருட பழமை வாய்ந்த அதிசியப்பொருள்!

  • Share on