• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மாயமான மீனவரை மீட்டு தரக் கோரி உறவினர்கள் மறியல் முயற்சி!

  • Share on

தூத்துக்குடியில் கடலில் மீன் பிடிக்க சென்ற போது மாயமான மீனவரை மீட்டு தரக் கோரி அவரது உறவினர்கள் நேற்று திரண்டதோடு திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


தூத்துக்குடி இனிக்கோ நகரைச் சேர்ந்தவர் பால்வின். இவரும் கரிவளம் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் உள்ளிட்ட மூன்று பேர் கடந்த 1ஆம் தேதி தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரையிலிருந்து கடலில் மீன் பிடிக்க புறப்பட்டுச் சென்றனர். மறுநாள் இவர்கள் அனைவரும் கரை திரும்பி இருக்க வேண்டிய நிலையில், பால்வின் மட்டும் கரை திரும்ப வில்லையாம். இதனால் பதறிய அவரது உறவினர்கள் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.


ஆனால் முறையாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்திடம்  மாயமான பால்வினை மீட்டு தருமாறு மனு அளித்தனர். அதன் பேரில் உடனடியாக இதுகுறித்து வழக்கு பதிவு செய்து  விரைந்து விசாரிக்குமாறு காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.


இருப்பினும் தொடர்ந்து மாயமான மீனவரின் நிலை தெரியாததால் அவரது உறவினர்கள் நேற்று இரவு இனிக்கோ நகரில் திரண்டதோடு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தென்பாகம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை சமரசப்படுத்தினர்.


தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் மாயமான மீனவரை மீட்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட பால்வின் உறவினர்கள் மற்றும் மீனவ மக்கள் தற்காலிகமாக சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்

  • Share on

தேரிக்காட்டில் நடந்த வித்தியாசமான பொங்கல் விழா கொண்டாட்டம்!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அள்ள அள்ள தங்கம்... குவிந்த கோடிகள்..வியக்கும் பக்தர்கள்!

  • Share on