தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக்கலை சிலம்பம் மற்றும் பொங்கல் பண்டிகையை உலகத்திற்கு எடுத்துக்காட்டும் விதமாக நாசரேத்தில் சிலம்ப பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.
தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில், ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்ப பள்ளி சார்பாக பாரம்பரிய முறைப்படி சிலம்ப பொங்கல் கொண்டாடப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தையும், பாரம்பரிய பண்டிகையான பொங்கலை உலகளவில் கொண்டு செல்வதற்காக தேரி காட்டில் பொங்கலிட்டு சிலம்பம் சுற்றி கொண்டாடினர். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் பானை முன் தனியாகவும் , குழுவாகவும் சிலம்பம் சுற்றி தங்கள் திறமையை வெளிப்படுத்தி பொங்கலிட்டு கொண்டாடினர். தொடர்ந்து சிலம்ப கம்புகள், சுருள்வால், உள்ளிட்ட தற்காப்புக் கலை ஆயுதங்களை வைத்து சிலம்பம் சுற்றி பாரம்பரியத்தை வெளிப்படுத்தினார். இதில் அப்பகுதியை சேர்ந்த ஊர்மக்கள் கலந்துகொண்டு சிலம்ப பொங்கலை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிக்காக ஏற்பாடு அலன் திலக் கராத்தே மற்றும் சிலம்ப பள்ளி மாஸ்டர் கராத்தே டென்னிசன் ஏற்பாடு செய்திருந்தார்