• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் கோலாகலமாக நடந்த சமத்துவ பொங்கல் விழா!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது. 


தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவுக்கு மாநகராட்சி கமிஷனர் மதுபாலன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.


தொடர்ந்து மாநகராட்சி வளாகத்தில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன், பானை உடைத்தல், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில், மேயர் என்.பி. ஜெகன் பெரியசாமி, கமிஷனர் மதுபாலன் ஆகியோர் மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள், கவுன்சிலர்களுடன் பங்கேற்று விளையாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

  • Share on

தூத்துக்குடியில் அறிக்கை விடும் அதிமேதாவிகள்... அமைச்சர் கீதா ஜீவன் பளார்!

மேலபாண்டியபுரம் ஊராட்சியில் புதிய நூலகம் : சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்!

  • Share on