• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் அறிக்கை விடும் அதிமேதாவிகள்... அமைச்சர் கீதா ஜீவன் பளார்!

  • Share on

தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு ரயில் பாதை அமைக்கும் விஷயத்தில் வழக்கம்போல் மத்திய அரசு பொய்யான தகவலை தெரிவித்து வருவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்


சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை பார்வையிட மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம் வேண்டாம் என்று எழுத்துப்பூர்வமாக மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதிவிட்டதாக தெரிவித்த மத்திய அமைச்சரின் தகவல் முற்றிலும் தவறானது. உண்மைக்கு புறம்பானது என்றும் தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி வருவதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:-


முதல்வர் மு.க ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தை மிகப்பெரிய அளவில் தொழில்நகரமாக மாற்றுவதற்கு பல்வேறு திட்டங்களை தொடர்ச்சியாக அறிவித்து வருகிறார். அப்படி இருக்கும்போது தூத்துக்குடியில் இருந்து விளாத்திகுளம், அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டு தான் இருக்கிறது.


தமிழகத்தை எல்லா விஷயங்களிலும் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் மோடி தலைமையிலான மத்திய அரசு, தூத்துக்குடியில் இருந்து விளாத்திகுளம் அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது. இந்த நிலையில் இந்த திட்டம் வேண்டாம் என்று தமிழக அரசு தெரிவித்து விட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்திருப்பதும், அவர் தெரிவித்தவுடன் தூத்துக்குடியில் உள்ள ஒரு சில அதிமேதாவிகள் அதனை நம்பி உண்மை என்று நம்பிக் கொண்டு அறிக்கை விடுவதும் கண்டனத்திற்குரியது.


மத்திய அமைச்சர் தெரிவித்திருப்பது முற்றிலும் பொய்யானது. தமிழக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிதாக ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த திட்டத்தை வேண்டாம் எனக் கூறி தமிழக அரசிடம் இருந்து எழுத்துபூர்வமான கடிதம் அனுப்பப்பட்டுள்ளதை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் தலைவர் சித்ராங்கதன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.


இந்தநிலையில், தூத்துக்குடியில் உள்ள ஒரு சில அதிமேதாவிகள் தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு ரயில் பாதை அமைக்கும் விஷயத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் கூறியதை உண்மை என்று நம்பிக் கொண்டு அறிக்கை விடுவதும் கண்டனத்திற்குரியது என அமைச்சர் கீதா ஜீவன் கூறியிருப்பது உள்ளூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.


  • Share on

தூத்துக்குடியில் சோகத்தை ஏற்படுத்திய சிறுவனின் உயிரிழப்பு!

தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் கோலாகலமாக நடந்த சமத்துவ பொங்கல் விழா!

  • Share on