தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய எஸ்பியாக மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி நெல்லை மாவட்ட எஸ்பியாக இருந்த மணிவண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக நியமிக்கப் பட்டுள்ளார். நெல்லை மாவட்ட எஸ்பியாக கிருஷ்ணராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.