• vilasalnews@gmail.com

திருச்செந்தூர் கோவில் விவகாரம் : தூத்துக்குடி பாஜக கோரிக்கை!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிகள் திருக்கோவில் தென்பகுதியில் உள்ள சண்முகவிலாசம் மண்டபம் உள்ளது. 


இந்த மண்டபத்தில் திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வரும் விவசாயபெருமக்கள் தங்களது வயலில் முதன்முதலாக உற்பத்திசெய்த நெல்மணிகள், தானியங்கள், பருத்தி, மா போன்ற காய்கறி பழவகைகளை இந்த சண்முக விலாசம் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு காணிக்கையாக படைத்து வழிபாடு செய்வது பாரம்பரியமான பல்லாண்டு காலம் தொட்டு நடைபெற்று வரும் வழக்கமாகும். 


அதேபோன்று திருவிழா போன்ற கூட்டநெரிசல் அதிகமாக உள்ள காலங்களில் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய முடியாதவர்கள் மற்றும் உள்ளுரைச் சார்ந்த பக்தர்கள், வியாபாரிகள், பணிநிமித்தமாக நீண்ட தொலைவிற்கு செல்வோர்கள் தினம்தோறும் இந்த மண்டபத்தில் இருந்து சண்முகரை வழிபட்டு செல்வதும் பல ஆண்டுகாலமாக வழக்கத்தில் உள்ள நடைமுறையாகும்.


இந்நிலையில் கடந்த கொரோனா நோய்தொற்றின் போது அடைத்து வைக்கப்பட்ட சண்முகவிலாசம் மண்டபம் வழக்கத்திற்கு மாறாக இதுவரையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமலே உள்ளது.


இதனால் தங்களது வயலில் முதன்முதலாக உற்பத்தி செய்த பொருட்களை திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கு நேர்த்திகடன் செலுத்த வரும் வெளியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சார்ந்த பக்தர்கள் தங்களது பாரம்பரியமாக முருகப்பெருமானுக்கு செய்துவரும்; ஐதீகத்தை கடைபிடிக்க முடியாதவாறும், அதேபோல் தினசரி வழிபாடு செய்யக்கூடிய உள்ளுர் பக்தர்கள், வியாபாரிகள், தரிசனம் செய்யமுடியாமலும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள்  அடைத்து வைத்து உள்ளனர்.


இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த சண்முக விலாசம் மண்டபம் அலுவலக தேவை மற்றும் விஐபிகளின் வசதிகளுக்காக மட்டுமே தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.


திருச்செந்தூர் கோவிலுக்கு வருகைதரும் பக்தர்கள் தாங்கள் விளைவித்த பொருட்களை முருகப்பெருமானுக்கு நேரடியாக சண்முகவிலாச மண்டபத்தினில் படையலிட்டு வழிபாடு நடத்த முடியாமல் போனதால் தான் வெள்ளபாதிப்புகள் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு விவசாயம் அழிந்து வருவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். 


 இந்த விவகாரத்தில் மாவட்ட  நிர்வாகம் தலையிட்டு திருச்செந்தூர் முருகப்பெருமான் திருக்கோவிலில் தமிழகமக்களால்  நம்பிக்கையின் அடிப்படையில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கத்தின்படி சண்முகவிலாசம் மண்டபத்தில் பக்தர்கள் வசதிக்காக வழக்கம்போல்  திறக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்.

  • Share on

வாரம் 3 முறை அசைவம், 3 வேளை நாள் ஒன்றிற்கு ரூ.100 மட்டுமே : தூத்துக்குடியில் அதிரடி உணவு ஆஃபர்!

பசுபதி பாண்டியன் நினைவு தினத்திற்கு தூத்துக்குடி நகரத்திற்குள் வர அனுமதி கிடையாது!

  • Share on