• vilasalnews@gmail.com

வாரம் 3 முறை அசைவம், 3 வேளை நாள் ஒன்றிற்கு ரூ.100 மட்டுமே : தூத்துக்குடியில் அதிரடி உணவு ஆஃபர்!

  • Share on

உணவு என்பது அனைவருக்குமான மிகமுக்கியமான ஓர் அடிப்படைத் தேவை. சாதாரண குடும்பங்கள் வருமானத்தில் பெரும்பகுதியை உணவுக்குத்தான் செலவிடுகின்றனர்.


தனி மனிதன் முதல் குடும்பங்கள் வரை உணவிற்கான செலவு என்பது மிகப்பெரிய பொருளாதார பிரச்சனையாகவே உள்ளது. மேலும், வெளியூர்களில் தங்கி வேலை பார்ப்பவர்கள் முதல் வெளியே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்கள், போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் வரை அனைவரும் உணவிற்காக செலவிடப்படும் தொகையானது  மிகப்பெரிய பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் வகையில் உண்டாகிறது. இவர்களுக்கெல்லாம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு குறைந்த செலவில், நிறைவான உணவு கிடைக்காதா என்பது தான்.


இந்தியாவில் தொழில் நகரங்களில் முதன்மையான வரிசைகளில் ஒன்றாக விளங்கக்கூடியது தூத்துக்குடி மாநகரம். இந்த தூத்துக்குடியில் துறைமுகம் வாயிலாக ஏற்றுமதி, இறக்குமதி தொழில்களும், அது சார்ந்த ஷிப்பிங் கம்பெனிகள், லாரி உள்ளிட்ட டிரான்ஸ் போர்ட் தொழில், உப்பு, பனை, மீன்பிடித்தல் என ஏராளமான தொழில்கள் உள்ளன. அதே போல், மிளகாய், உளுந்து, பாசி, மக்காசோளம், வாழை, வெங்காயம், வத்தல், பருத்தி உள்ளிட்ட பயிர்களை அதிக அளவில் விளைச்சல் செய்யக்கூடிய விவசாயம் நிறைந்த பூமியாகவும் தூத்துக்குடி விளங்குகிறது.


மேலும், தூத்துக்குடியில் செயல்படும் போட்டித் தேர்விற்கான பயிற்சி மையங்கள் அதிக அளவில் மாணவர்களை அரசு பணிகளுக்கு அனுப்புவதால், இங்குள்ள பயிற்சி மையங்களில் பயின்றால் நிச்சயம் அரசு வேலைக்கு சென்று விடலாம் என்ற நம்பிக்கையோடு, தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் இளைஞர்களும், இளம்பெண்கள்  தூத்துக்குடியை நோக்கி வந்து இங்கு வாடகை வீடு மற்றும் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர். இதனால், தூத்துக்குடியில் வெளியூரைச் சேர்ந்தவர் பலர் தங்கியிருக்கூடிய சூழல் உள்ளது.


இவ்வாறு, வேலைக்காகவும், படிப்புகளுக்காவும் தூத்துக்குடியில் தங்கியிருப்பவர்களுக்கான மிக முக்கியமான பிரச்சனையும், எதிர்பார்ப்பும் என்னவென்றால், குறைந்த செலவில், நிறைவான உணவு தூத்துக்குடியில் எங்கு கிடைக்கும் என்ற தேடல் தான். அப்படி அவர்களின் தேடல்களையும், தேவைகளையும் புரிந்து கொண்டு, அதனை பூர்த்தி செய்யும் விதமாக தூத்துக்குடியில் உள்ள ஒரு உணவகம் ஒரு அசத்தலான உணவு சலுகையை தந்துள்ளது. தூத்துக்குடி 60 அடி ரோடு போல்பேட்டை கிழக்கு, பெரிசன் பிளாசா மிக அருகில் அமைந்துள்ள பனை குடில் தமிழ் பாரம்பரிய வீட்டு சாப்பாடு உணவகம் தான் இந்த சலுகை விலை உணவு புரட்சியை தூத்துக்குடியில் செய்துள்ளது.


அதாவது, காலை, மதியம், இரவு மூன்று வேளையும் சேர்ந்து ஒரு நாளுக்கான உணவு தொகை ரூ.100 மட்டுமே. மேலும், இதில் வாரம் மூன்று முறை அசைவ உணவும் அடங்கும். இந்த முறையானது பார்சல் மட்டுமே. டோர் டெலிவரி வசதியும் உள்ளது.  உணவு ஆர்டர்களுக்கு : 8870808441 தொடர்பு கொள்ளவும்.

  • Share on

திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் ஒருவர் வாகனம் மோதி பலி : மற்றொருவர் படுகாயம்!

திருச்செந்தூர் கோவில் விவகாரம் : தூத்துக்குடி பாஜக கோரிக்கை!

  • Share on