பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குறித்து தெற்கு ரயில்வே அறிவித்தது.
பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல பயணிகளின் வசதிக்காக தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே, தொழில் நகரமான தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ஒதுக்காமல் தவிர்த்து இருப்பது ஏமாற்றத்தை தந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், பொங்கல் பண்டிகைக்கு பெங்களூர் - தூத்துக்குடிக்கும், தூத்துக்குடி - மைசூருக்கும் தைப் பொங்கல் ( சங்கராந்தி ) சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி,
வண்டி எண்: 06569
SMVB பெங்களூர் - தூத்துக்குடி
புறப்படும் நாள் - 10-01-2025 ( வெள்ளிக்கிழமை )
பெங்களூர் : புறப்படும் நேரம், இரவு 10-00 மணி
தூத்துக்குடி வந்து சேரும் நேரம், மறுநாள் (11.01.25 ) காலை 11- 00 மணி
நிறுத்தங்கள் : கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி .
வண்டி எண் : 06570
தூத்துக்குடி - மைசூர்
தூத்துக்குடி புறப்படும் நாள் : 11-01-2025. சனிக்கிழமை மதியம் 01-00 மணி
மைசூர் சென்றடையும் நேரம் மறுநாள் ( 12-01-25 ) காலை 06-30 மணி
நிறுத்தங்கள்: கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூர், மாண்டியா, எலியூர்.