• vilasalnews@gmail.com

தூத்துக்குடி பெண்களே ரெடியா? பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் பொங்கல் விழா கொண்டாட்டம்!

  • Share on

தூத்துக்குடி காமராஜ் கல்லுாரியில் வரும் 10ஆம் தேதி "நம்ம தூத்துக்குடியில் பொங்கல் விழா" என்ற தலைப்பில் பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் பல்வேறு போட்டிகள் நடக்கிறது. 


தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம், விமன்ஸ் சேவா டிரஸ்ட், தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் (காமராஜ் கல்லுாரி) இணைந்து மகளிர் மட்டும் கலந்து கொள்ளும் 'நம்ம தூத்துக்குடியில் கிராமத்து பொங்கல் விழா மெகா நிகழ்ச்சி தூத்துக்குடி காமராஜ் கல்லுாரி வளாகத்தில் வரும் 10ஆம் தேதி நடக்கிறது. 


பொங்கல் விழாவையொட்டி, கோலப்போட்டி, உறியடி, கயிறு இழுத்தல், வட்டக்கல் துாக்குதல், கிராமத்து உடை அலங்காரம், கம்பீர எருது நடை (மகளிர் தாங்கள் வளர்த்து வரும் எருது அல்லது காளை மாடை கையில் பிடித்து கம்பீர மாக நடைபோட வேண்டும்) ஆகிய போட்டிகள் ஜன., 10 ஆம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. 


மயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் கொண்டாட்டத்துடன், கும்மி, மாட்டுவண்டி சவாரி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் சமத்துவ பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.


மேலும், பெண்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏராளமான போட்டிகள் நடக்கிறது தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது இதில் வெற்றி பெறுவதற்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்படுகிறது இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட மகளிர் 7871702700, 9361086551  ஆகிய செல்போன் வழி தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். 

  • Share on

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட வௌிமாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது!

புகார் கொடுத்து 3 மாதங்களுக்கு மேலும் நடவடிக்கை இல்லையா? எஸ்பியை நேரில் சந்திக்கலாம்!

  • Share on