• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட வௌிமாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது!

  • Share on

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்திய பைக், செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க எஸ்பி  ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி போதை பொருள் தடுப்பு சிறப்பு தனிப்படை அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தனிப்படை உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 


அப்போது, தூத்துக்குடி அமுதாநகர் பகுதியில் பரமசிவன் (42) என்பவர், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டு இருந்துள்ளார். உடனடியாக தனிப்படை போலீசார் பரமசிவனை மடக்கிபிடித்தனர். அவரிடம் இருந்து 370 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இந்த விற்பனைக்கு பயன்படுத்திய ஒரு செல்போன், ஒரு பைக் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். 


பின்னர், பரமசிவன் மற்றும் லாட்டரி சீட்டுகள் உள்ளிட்ட பொருட்களை தென்பாகம் போலீசில் தனிப்படையினர் ஒப்படைத்தனர். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

  • Share on

ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முன்னாள் அரசு அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

தூத்துக்குடி பெண்களே ரெடியா? பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் பொங்கல் விழா கொண்டாட்டம்!

  • Share on