• vilasalnews@gmail.com

ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முன்னாள் அரசு அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

  • Share on

தராசு முத்திரையிடும் உரிமம் வழங்குவதற்கு ரூபாய் 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் முன்னாள் உதவி ஆய்வாளருக்கு மூன்று ஆண்டு சிறைதண்டனை வழங்கி தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் மேற்கு தோப்புத் தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் ( 66 ). இவர் தராசு முத்தரையிடுவதற்கான உரிமம் பெறுவதற்காக புதிதாக விண்ணப்பித்துள்ளார். இதற்காக கடந்த 20.3.2013  அன்று முத்துராமலிங்கம் காளிராஜ் சந்தித்து ரூபாய் 3,000 பணம் கொடுத்துள்ளார்.


அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் காளிராஜை மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி  தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.


வழக்கை நீதிபதி வசித்குமார் விசாரித்து காளிராஜிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜென்சி ஆஜரானார்.

  • Share on

8 கொலை வழக்குகளில் தொடர்புடைய தூத்துக்குடி பிரபல ரவுடி கோவையில் கைது!

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட வௌிமாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது!

  • Share on