• vilasalnews@gmail.com

தூத்துக்குடியிருந்து இந்திய அளவில் முதல் இடம் பிடித்து சாதனை!

  • Share on

கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த பிராந்திய கிராமப்புற வங்கி (RRB) தேர்வில் தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் படித்த  வல்லரசு என்கிற மாணவன் இந்திய அளவில் முதல் இடம் பிடித்து கின்ஸ் அகாடமிக்கும், தூத்துக்குடிக்கும் பெருமை சேர்த்துள்ளார். 


நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், போடிநாயக்கன் பட்டி கிராமத்தை சேர்ந்த வெங்கடாச்சலம் - மேகலா தம்பிகளின் மகன் வல்லரசு. இவரின் சிறுவயதில் தந்தை இறந்துவிடவே, தாயார் கூலி வேலை செய்து வல்லரசுவை படிக்க வைத்துள்ளார். தனது குடும்ப வறுமையிலும் விடா முயற்சியுடன் படிப்பில் கவனம் செலுத்தி பள்ளி படிப்புகளில் நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளார். இவர் 10 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றதற்காக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் கரங்களால் தங்க நாணயம் பரிசாக பெற்றுள்ளார்.


தொடர்ந்து படித்து, போட்டி தேர்விற்கு தயாராகி பணியில் சேர்வதற்காக, தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் சேர்ந்து படித்து வந்துள்ளார். அவருக்கு அனைத்துவிதமாக உதவிகளையும் கின்ஸ் அகாடமி நிறுவனர் பேச்சுமுத்து செய்து கொடுத்துள்ளார். இதனையடுத்து, கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த பிராந்திய கிராமப்புற வங்கி (RRB) தேர்வில் 72.28/100 மதிப்பெண்கள் எடுத்து இந்திய அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படித்துள்ளார்.


மேலும், மாணவன் வல்லரசுவின் திறமையை பாராட்டி பெருமைப்படுத்தும் விதமாக கின்ஸ் அகாடமியில் அவரது பெயரில் ஒரு ஹாலை உருவாக்கி இருக்கிறார் கின்ஸ் அகாடமி நிறுவனர் பேச்சுமுத்து.


பொருளாதார வறுமையிலும், விடாமுயற்சி தன்னம்பிக்கையோடு, தூத்துக்குடி கின்ஸ் அகாடமி பயிற்சி மையத்தின் உதவியோடு பிராந்திய கிராமப்புற வங்கி (RRB) தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்திருக்கும் வல்லரசு என்கிற மாணவனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடி வீரநாயக்கன்தட்டு பகுதி சாலை பணிகள் விரைவில் தொடங்குகிறது - திமுக நிர்வாகி தகவல்!

8 கொலை வழக்குகளில் தொடர்புடைய தூத்துக்குடி பிரபல ரவுடி கோவையில் கைது!

  • Share on