• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் பணியிடமாற்றம் : மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 11 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி,


1.கோவில்பட்டி அலகு 1, கோவில்பட்டி - வாஞ்சிமணியாச்சி இரட்டை ரயில் பாதை திட்டத்தின் நில எடுப்பு தனி வட்டாட்சியராக செயல்பட்டு வந்த சுபா, எட்டையபுரம் வருவாய் வட்டாட்சியராகவும்


2.எட்டையபுரம் வருவாய் வட்டாட்சியராக இருந்த சங்கரநாராயணன், திருச்செந்தூர் உடன்குடி அனல் மின் நிலைய திட்டப்பணிகள் நில எடுப்பு அலகு 5, நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும்,


3.தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் நில எடுப்பு தனி வட்டாட்சியர் ராஜேஸ்வரி, திருச்செந்தூர் உடன்குடி அனல் மின் நிலைய திட்டப்பணிகள் நில எடுப்பு அலகு 3, நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும்


4.விளாத்திகுளம், தூத்துக்குடி - மதுரை ( அருப்புக்கோட்டை வழி ) புதிய அகல இரயில் பாதை திட்டத்தின் நில எடுப்பு அலகு 1, நில எடுப்பு தனி வட்டாட்சியர்  லட்சுமி கணேஷ், எட்டையபுரம் வெம்பூர் சிப்காட் அலகு 5, நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும்


5.விளாத்திகுளம், தூத்துக்குடி - மதுரை ( அருப்புக்கோட்டை வழி ) புதிய அகல ரயில் பாதை திட்டத்தின் நிலை எடுப்பு அலகு 2 தனி வட்டாட்சியர் பாலசுப்ரமணியன், கோவில்பட்டி அலகு 1 கோவில்பட்டி - வாஞ்சிமணியாச்சி இரட்டை ரயில் பாதை திட்டத்தின் நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும்,


6.எட்டையபுரம் வெம்பூர் சிப்காட் அலகு 5, நில எடுப்பு தனி வட்டாட்சியர் சுடலை மணி, நெடுஞ்சாலை நில எடுப்பு 2 அலகு 5 ( நாகப்பட்டினம் - ராமநாதபுரம் - தூத்துக்குடி ) நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும்,


7.எட்டையபுரம் வெம்பூர் சிப்காட் அலகு 3, நில எடுப்பு தனி வட்டாட்சியர் கருப்பசாமி, நெடுஞ்சாலை நில எடுப்பு 1 அலகு 1 ( தூத்துக்குடி - திருச்செந்தூர் - கன்னியாகுமரி ) நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும்,


8.தூத்துக்குடி நெடுஞ்சாலை நில எடுப்பு - || அலகு 5, நில எடுப்பு தனிவட்டாட்சியர் செல்வலட்சுமி, நெடுஞ்சாலை நில எடுப்பு 1 அலகு 3 ( தூத்துக்குடி - திருச்செந்தூர் - கன்னியாகுமரி ) நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும்,


9.எட்டையபுரம் வெம்பூர் சிப்காட் அலகு 6, நில எடுப்பு தனி வட்டாட்சியர் சீனுவாசன், நெடுஞ்சாலை நில எடுப்பு 1 அழகு 4 ( தூத்துக்குடி - திருச்செந்தூர் - கன்னியாகுமரி ) நிலை எடுப்பு தனி வட்டாட்சியராகவும்,


10.தூத்துக்குடி நெடுஞ்சாலை நில எடுப்பு 1 அழகு 1 நிலை எடுப்பு தனி வட்டாட்சியர் ரகுபதி ராஜா, திருச்செந்தூர் உடன்குடி அனல் மின்நிலைய திட்ட பணிகள் அலகு 6 நிலை எடுப்பு தனி வட்டாட்சியராகவும்,


11.தூத்துக்குடி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளர் ராதாகிருஷ்ணன் ( விடுப்பு முடிவடையும் நிலையில் நிலையில் ) மீண்டும் அதே இடத்தில் தொடர்கிறார்.

  • Share on

தூத்துக்குடியில் நாளை ( ஜன.,7 ) மின் தடை : ஏரியாக்கள் லிஸ்ட்!

வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு!

  • Share on