• vilasalnews@gmail.com

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஒருபோதும் அனுமதி அளிக்கக்கூடாது - தமிழக முதல்வரிடம் வணிகர் சங்கம் பேரவை கோரிக்கை

  • Share on

தூத்துக்குடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் வாகைகுளம் விமான நிலையத்தில்  சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இன்று (17.2.2021) புதன்கிழமை தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 10.15 மணிக்கு வாகைகுளம் விமான நிலையத்துக்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் அவரை சந்தித்த  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மக்களின் ஒட்டுமொத்த வேண்டுகோளான 'நச்சு ஆலையான ஸ்டெர்லைட்டிற்கு' ஒருபோதும் அனுமதி அளிக்கக்கூடாது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது மக்கள் மீது எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் எனவும், மழைக்காலங்களில் மழைநீர் மட்டுமல்லாது கோரம்பள்ளம் குளத்திற்கு வரும் நீரினையும் தகுந்த முன்னேற்பாடுகளுடன் நடவடிக்கைகள் எடுத்து அணைத்து நீரினையும் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இரவு நேரங்களில்  நேரக் கட்டுப்பாடுகள் இன்றி கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் அரசு வணிக வளாகங்கள் கடைகள் வைத்திருந்த வியாபாரிகளை காலி செய்து புதிதாக கட்டிடம் கட்ட வழிவகை செய்தது வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை இன்று வரை பாதித்து வருகிறது. ஆதலால் புதிய கட்டிடம் கட்டிய பிறகு உரிய வணிக வளாகங்களில் ஏற்கனவே வணிகம் செய்துவந்த வியாபாரிகளுக்கு இடம் அளிப்பதுடன் அவர்களுக்கு முன் உரிமையுடன் கூடிய வாடகை சலுகையும் வழங்கிட வேண்டும்.

பக்கிள்ஓடயை தூய்மைப்படுத்துவது உடன் அதில் உள்ள கழிவுகளை முறையாக அகற்றிய பின்பு மீதமுள்ள நீரை கடலில் கலக்க வழிவகை செய்தல் வேண்டும். 

இக்கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி அளிக்கும் பட்சத்தில் அனைத்து மக்கள் ஆதரவும் அண்ணா திராவிட  முன்னேற்ற கழகத்திற்கு உண்டு என்று அம்மனுவில் கூறியிருந்தனர்.

உடன் ஸ்டெர்லைட் எதிர்பாளர் பாத்திமா பாபு, வணிகர் சங்க  பேரவை வடக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர், வழக்கறிஞர் அதிசய குமார், ரீகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

  • Share on

விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

விளாத்திகுளம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

  • Share on