• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் தனியார் நிறுவன சூப்பர்வைசர் தீக்குளித்து தற்கொலை!

  • Share on

தூத்துக்குடியில் தனியார் நிறுவன சூப்பர்வைசர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


தூத்துக்குடி பிரையன்ட் நகர் 6 வது தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம் என்பவரது மகன் மகேஷ் குமார் (28). தனியார் ஆயில் கம்பெனியில் சூப்பர்வைசர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. சிறுவயதில் ஏற்பட்ட தீக்காயத்தால் முகத்தில் வடு இருந்துள்ளது. இதனால், அவர் மன விரக்தியில் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயற்சி செய்தாராம். அப்போது, அவரை பெற்றோர்கள் காப்பாற்றி விட்டார்களாம். 


இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் தனது வீட்டில் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.  இதில் உடல் முழுவதும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் இரும்பு கடையில் திருட்டு : 2 பேர் கைது!

தூத்துக்குடியில் நாளை ( ஜன.,7 ) மின் தடை : ஏரியாக்கள் லிஸ்ட்!

  • Share on