
தூத்துக்குடியில் பழைய இரும்பு கடையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் நேசமணி நகரைச் சேர்ந்தவர் குலாம் மகன் மரிய வின்சென்ட் (70). இவர் அந்தப் பகுதியில் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று அவரது குடோனில் பூட்டை உடைத்து உள்ளே சென்று ரூபாய் 25 ஆயிரம் மதிப்புள்ள இரும்புகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டார்களாம்.
இது குறித்து மரிய வின்சென்ட் கொடுத்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலையப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், முள்ளக்காடு எம்.சவேரியார் புரத்தைச் சேர்ந்த மங்கல பாண்டி மகன் தங்கதுரை (32), செந்தூர் பாண்டி மகன் வேல்ராஜ் (34) ஆகிய 2 பேரையும் கைது செய்து இரும்புகளை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.