
தூத்துக்குடி மாநகராட்சியில் சாலையில் சுற்றித் திரிந்த 24 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களிடமிருந்து ரூ.80,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாநகரத்தின் முக்கிய வீதிகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக அலைந்து திரியும் கால்நடைகளை வளர்ப்போர் தங்களுக்கு சொந்தமான இடங்களில் கொட்டில் அமைத்து பராமரிக்குமாறு மாநகராட்சி சார்பில் பல்வேறு காலகட்டங்களில் அறிவிப்புகள் செய்து வந்த நிலையில், தற்போது மாநகரின் பிரதான சாலைகளில் அலைந்த 24 மாடுகள் தூத்துக்குடி மாநகராட்சியால் 28.12.2024 அன்று பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடமிருந்து ரூ.80,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது
எனவே கால்நடை வளர்ப்போர் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் கொட்டில் அமைத்து முறையாக பராமரிக்குமாறு மாநகராட்சி சார்பில் மீண்டும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்நிலை தொடருமாயின் மேற்படி அபராதங்கள் கூடுதலாக விதிப்பதோடு கால்நடையின் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.