தூத்துக்குடி மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் 13வது ஆண்டு துவக்க விழா 3ம் மைல் அருகில் இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் 13வது ஆண்டு துவக்க விழா 3ம் மைல் அருகில் மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் இன்று (16.02.2021) செவ்வாய்கிழமை நடைபெற்றது.
விழாவில், 50க்கு மேற்பட்ட பெண்களுக்கு சேலை மற்றும் பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் மனோகரன், மாவட்ட பொருளாளர் பெருமாள், மாவட்ட துணை செயலாளர் நல்ல தம்பி சங்க ஆலோசகர் முத்து, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், குமாரவேல்,சித்திரவேல்,ராஜ்பால்,சேர்மத்துரை, நித்தியானந்தம், மாரியப்பன், கணேசன், ரமேஷ் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்