
திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வி.எம்.எஸ் நகர் கிங் ஆப் கிங்ஸ் பள்ளியில் நாளை ( ஜன.,5 ) சிறப்பு முகாம் நடக்கிறது.
இந்த முகாமை, திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன் துவக்கி வைக்கிறார். தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி தலைமை வைக்கிறார். மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் முன்னிலை வகிக்கிறார்.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் நெல்லை காவேரி மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். ஏற்பாடுகளை மாநகர திமுக துணைச் செயலாளரும், மாமன்ற உறுப்பினரும், மாநகர பணிக் குழு தலைவருமான கீதா முருகேசன் செய்து வருகிறார்.