• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் நகை திருட்டு : மர்ம நபர்கள் கைவரிசை!

  • Share on

தூத்துக்குடி தாளமுத்து நகர் ஜாகீர் உசேன் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர்.  தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சுமதி ( 45 ). 


இவர் கடந்த 27ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு அதன் சாவியை கதவின் மேல் வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சாவியை எடுத்து வீட்டைத் திறந்து பீரோவை உடைத்து அதிலிருந்து செயின்கள், மோதிரம், கம்மல் உட்பட ஆறு பவுன் நகைகளையும் ஒரு ஜோடி வெள்ளி கொழுசையும் செய்யும் திருடிச் சென்றுள்ளனர்.


பின்னர் வீடு திரும்பிய சுமதி, வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து ஆறு பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. பின்னர் போலீசில் புகார் செய்யப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் தடயங்கள் பதிவு செய்யப்பட்டது. கொள்ளை அடிக்க பட்ட நகைகளின் மதிப்பு சுமார் 2.75 லட்சம் ஆகும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடிக்கு ரயிலில் வந்த ரூ.1.62 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்!

கனிமொழி எம்பி பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் நாளை சிறப்பு மருத்துவ முகாம் : அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைக்கிறார்!

  • Share on