• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவரிடம் செல்போன் பறிப்பு : 2 சிறுவர்கள் கைது!

  • Share on

தூத்துக்குடி பூ மார்க்கெட் பகுதியில் செல்போன் பறித்ததாக இரண்டு சிறுவர்களை மத்திய பாகம் போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.


தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் செல்லக்கண்ணன் ( 50 ).  தூத்துக்குடி பூ மார்க்கெட்டிற்கு நேற்று முன்தினம் வந்துள்ளார். அங்கு பூ வாங்கிக் கொண்டிருந்த போது அங்கு வந்த 4 மர்ம நபர்கள் செல்லக்கண்ணனிடம் இருந்து செல்போனை பறித்து தப்பிச் சென்றனர்.


இது குறித்த புகாரின் பேரில் மத்திய பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் 16, 17 வயது சிறுவர்கள் இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

  • Share on

சாலை விபத்தில் எட்டையபுரம் இளைஞர் உயிரிழப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை ( ஜன.,4 ) மின்தடை பகுதிகள் அறிவிப்பு!

  • Share on