• vilasalnews@gmail.com

தூத்துக்குடி முத்துநகர் ரயிலுக்கு " வயது 145 "

  • Share on

பேர்ல் சிட்டி (முத்துநகர்) சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலானது இந்திய இரயில்வேயின் தெற்கு இரயில்வே மண்டலத்தில் உள்ள தூத்துக்குடி - சென்னை,  சென்னை - தூத்துக்குடி வரை இயங்கும் இரவு நேர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலாகும்.


கோவில்பட்டி, விருதுநகர் , மதுரை , திண்டுக்கல் , திருச்சிராப்பள்ளி , விருத்தாசலம் , விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தூத்துக்குடி மற்றும் சென்னை எழும்பூர் இடையே பேர்ல் சிட்டி (முத்துநகர்) சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது .


இந்த முத்துநகர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலானது ஜனவரி 1 ஆம் தேதி 1880 ஆம் ஆண்டு தனது முதல் சேவையை தொடங்கியது. தற்போது 145 வது ஆண்டு தனது பிறந்த நாளை கொண்டாடுகிறது.


முத்துநகர் ரயிலுக்கு தூத்துக்குடி மாவட்ட மக்களிடையே எப்போதும் பெரிய வரவேற்பு உண்டு. காரணம், சென்னை டூ தூத்துக்குடி,  தூத்துக்குடி டூ சென்னைக்கு நேரடியான போக்குவரத்தை பூர்த்தி செய்யக்கூடிய ஒரே ரயில் சேவை முத்துநகர் ரயில் மட்டும் தான். அதனால் தான் இந்த ரயிலுக்கு தூத்துக்குடி மக்களிடையே தனிப்பிரியம் உண்டும். அந்த பிரியமும், பாசமும் தான் முத்துநகர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தனது 145 வது வயதை அடைய காரணம் என்று சொன்னால் அதுமிகையல்ல. சென்னைக்கு தூத்துக்குடியில் இருந்து இந்த ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுவதால், இந்த ரயிலில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிந்தே காணப்படும். 


தூத்துக்குடி முத்துநகர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் 145 வது பிறந்தநாளை கொண்டாடி மகிழும் தூத்துக்குடி மக்கள் இந்திய ரயில்வே, மத்திய, மாநில அரசுகள், மக்கள் பிரநிதிகள் அனைவருக்கும் வைக்கும் ஒரே கோரிக்கை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் மிகப்பெரிய நீண்ட நாள் எதிர்பார்ப்பு, இந்த முத்துநகர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் போல, பகல் நேரத்திலும் தூத்துக்குடி - சென்னை, சென்னை - தூத்துக்குடி புதிய ரயில் சேவை வேண்டும் என்பதுதான்.

  • Share on

தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில்களின் கால அட்டவணை!

தூத்துக்குடியில் காட்டுப்பகுதியில் ஒருவர் அடித்துக் கொலை : போலீஸ் விசாரணை!

  • Share on