• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் ஒரு வருடத்தில் நடந்த அசாத்திய மாற்றம்.. வியந்த மக்கள்!

  • Share on

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலையின் கட்டுமானம் மிக வேகமாக நடந்து வருகிறது. கடந்த வருடம் தான் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் அனைத்து அனுமதிகளும் முடிந்து தளம், மற்றும் கூரை அமைக்கும் பணிகள் முடிந்துள்ளது.


தூத்துக்குடி கொஞ்சம் கொஞ்சமாக முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்ததாக தூத்துக்குடி தொழிற்சாலைகளின் கிளஸ்டராக மாற தொடங்கி உள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் ரிப்போர்ட் ஒன்றும் கூட அதை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது. மேலும், இந்தியாவின் ஹைட்ரஜன் ஹப்பாக தூத்துக்குடி மாற தொடங்கி உள்ளது.


தூத்துக்குடியில் கிரீன் ஹைட்ரஜன் தயாரிக்க ACME நிறுவனம் 52,000 கோடி ரூபாயும், Petronas நிறுவனம் 34,000 கோடி ரூபாயும், Sembicorp நிறுவனம் 36,238 கோடி ரூபாயும், Leap Green Energy நிறுவனம் 22,842 கோடி ரூபாயும், NTPC கிரீன் ஹைட்ரஜன்-க்காக மாபெரும் கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. இந்திய அரசு ஏற்கனவே வஉசி துறைமுகத்தை ஹைட்ரஜன் சேமிப்பு மையமாக அறிவித்துள்ளது.


சென்னையில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஏக்கருக்கு சிப்காட் உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில் தான் மாநிலத்திலேயே அதிக சிப்காட் தொழில் பூங்காக்கள் இருக்கும். 


1. தூத்துக்குடி Ph-1 & 2 : 2509 ஏக்கர் (தற்போது உள்ளது)

2. வைப்பார் : 1,020 ஏக்கர்

3.சில்லாநத்தம்: 394 ஏக்கர்

4.அல்லிகுளம்: 2,234 ஏக்கர்

5.வெம்பூர்: 2,814 ஏக்கர்

6.இ.வேலாயுதபுரம் : 355 ஏக்கர்

7.மரச்சாமான்கள் பூங்கா : 1,100 ஏக்கர் 


இது போக சென்னைக்கு வர இருந்த வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் கட்டுமானத்தை மேற்கொண்டு வருகிறது. வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் என்பது வியட்நாமின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றாகும்.


இப்போது இ வாகனங்கள் தயாரிப்பில் முன்னிலையில் இருக்கிறது. மின்சார கார்கள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்கள் போன்ற மின்சார வாகனங்களை (EV) தயாரிப்பதில் விரிவடையும் முதல் கார் பிராண்டாகும். உலகின் நம்பர் ஒன் பிராண்ட் இதுதான். இந்த நிறுவனம்தான் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. அதுவும் தூத்துக்குடிக்கு தேடி வந்துள்ளது.


இந்திய நிலையில் தூத்துக்குடி கொஞ்சம் கொஞ்சமாக முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, ஓசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி ஆட்டோமொபைல் கிளஸ்டராக மாற தொடங்கி உள்ளது என்று தமிழ்நாடு கைடன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


தூத்துக்குடியில் கடந்த ஒரு வருடத்தில் ஏகப்பட்ட முதலீடுகள் குவிந்து உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் தூத்துக்குடிக்கு 1,40,000 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்கள் கிடைத்துள்ளன. மொத்த தமிழ்நாடு மாநிலத்தை பசுமையான ஹைட்ரஜன் மையமாக மாற்ற தூத்துக்குடி மையமாக மாறி உள்ளது.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் 2024ல் காவல்துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் கொலை குற்ற சம்பவங்கள் குறைவு - மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வீல் சேர் வழங்கிய மீனவன் மக்கள் சேவை அறக்கட்டளை!

  • Share on