
தூத்துக்குடி மாவட்டத்தில் 2024ல் காவல்துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் கொலை குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளதாக மாவட்ட காவல்துறை அறிவித்தது.
கொலை குற்ற வழக்குகள் : (Murder Case)
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2024) காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் கொலை குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது.
அதன்படி கடந்த 2023 ஆண்டுடன் ஒப்பிடும்போது 6% கொலை வழக்குகள் குறைவாகவும், 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 18% குறைவாகவும் பதிவாகியுள்ளது.
காய வழக்குகள் (Hurt Case)
மேலும் காயவழக்குகளில் இந்த ஆண்டுடன் கடந்த 2023 ஆம் வருடத்தை ஒப்பிடும்போது 2024ஆம் ஆண்டு 34% கொடுங்காய வழக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.
போக்சோ வழக்கு தீர்ப்புகள் (Pocso Conviction)
அதே போன்று போக்சோ வழக்ககுகளில் தண்டனை விகிதம் கடந்த 2023 ஆண்டு 10% ஆக தீர்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில் இந்த வருடம் 25% தீர்ப்புகள் அதிகரித்துள்ளது.
கொலை வழக்கு தீர்ப்புகள் (Murder Case Conviction)
தண்டனை விகிதம் கடந்த 2023 ஆம் ஆண்டு 7% ஆக தீர்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில் 2024ஆம் ஆண்டு காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் 50% ஆக தீர்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.