
தூத்துக்குடி மக்களுக்கான பொழுபோக்கு இடத்தின் எதிர்பார்ப்பை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்பட்ட பின் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூர்த்திசெய்துள்ளது.
கடல்சார்ந்த பகுதியாக தூத்துக்குடி இருந்தாலும், அங்குள்ள கடற்கரைகள் முறையான பராமரிப்பின்றி காணப்பட்டதால் மக்களின் வருகையும் குறைவாகவே இருந்து வந்தது. இந்த சூழலில்தான், கடந்த 2022 ஆம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்பட்டு இருக்கும் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையானது பொதுமக்களுக்கு முக்கிய பொழுதுபோக்கு தளாமாக உருவெடுத்து இருக்கிறது.
இந்த முத்து நகர் பீச்சில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக செயற்கை நீர்வீழ்ச்சி, கேலரி போன்ற இருக்கை அமைப்புகள் அமைக்கப்பட்டது. அழகிய முத்துபோன்ற சிலை, செல்பி பிரியர்களை கவர்வதற்காக I LOVE TUTY என்ற எழுத்து கொண்ட செல்பி ஸ்பாட், கண்களை கவரும் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.
சிறுவர்களை கவர்வதற்கான பூங்காவில் சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் போன்ற பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. நடைபயிற்சி செய்ய வரும் மக்களின் வசதிக்காக ஜிக் ஜாக் வடிவில் நடைபயிற்சி மேடைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இசை, கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக திறந்தவெளி மேடை ஒன்றும் உள்ளது. இரவு நேரங்களிலும் சுற்றுலா பயணிகள் வருவதற்காக அமைக்கப்பட்ட எல்.இ.டி. விளக்குகள் கடற்கரை முழுவதும் ஜொலிக்கின்றன.
நீங்க இதை கவனிச்சீங்களா?
தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் கன்னியாகுமரியில் கடற்கரையில் வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்ட வள்ளுவர் சிலை போலான மாதிரி 10 அடி உயர வள்ளுவர் சிலை ஃபேப்ரிகால் அமைக்கப்பட்டு வருகிறது.
அதாவது, கன்னியாகுமரியில் கடலில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் சிலை 133 உயரத்தில் அமைக்கப்பட்டது. இதன் வெள்ளி விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்வதற்காக கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டு அதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிலையில், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, அதை நினைவு கூறும் வகையில் தமிழக அரசு சார்பில் வள்ளுவனின் புகழை தமிழகம் முழுவதும் பறைசாற்றும் வகையில் சிலைகள் அமைக்க உத்தரவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதியில், கன்னியாகுமரியில் 133 அடி உயரத்தில் அமைந்துள்ள திருவள்ளுவரின் சிலையின் மாதிரி போன்று 10 அடி உயரத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டு வருகிறது. ஃபேப்ரிக்கால் உருவாக்கப்பட்ட இந்த சிலை தத்ரூபமாக கற்சிலை போன்று உள்ளது.