
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள கொல்லம்பரம்பு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி லட்சுமி (30) .
நேற்று முன்தினம் மாலை லட்சுமியும் அவரது உறவினர் சென்னமாளும் இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடிக்கு சென்று ஜவுளி எடுத்துவிட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். டூவீலரை சென்னம்மாள் ஓட்டினார். அப்போது, வெங்கடேஸ்வரபுரம் அருகே வரும் போது இதே ஊரைச் சேர்ந்த மாடசாமி மகன் ஐயப்பன் ஒட்டி வந்த டிராக்டர் சென்னம்மாள் ஓட்டி வந்த டூவீலர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் சென்னம்மாள், லட்சுமி ஆகியோர் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். இதனை அடுத்து அப்பகுதியினர் அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து லட்சுமியின் கணவர் செல்வகுமார் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.