• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் நிதி நிறுவன ஊழியரை தாக்கிய வாலிபர் கைது!

  • Share on

தூத்துக்குடி காமராஜர் நகரை சேர்ந்தவர் பட்டு ராஜா ( 27 ). கட்டிட தொழிலாளி. இவரது தாய் காளீஸ்வரி தூத்துக்குடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தவணை கடன் பெற்றுள்ளார்.


இந்த கடனுக்கு மாத தவணையாக ரூபாய் 2,550 வீதம் 24 மாதங்கள் செலுத்த வேண்டும். இந்தநிலையில், காளீஸ்வரி டிசம்பர் மாதத் தவணையை கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, தனியார் நிதி நிறுவன ஊழியரான தூத்துக்குடி சத்யா நகரை சேர்ந்த தங்க முனியசாமி மகன் ஜேசுராஜ் ( 21 ) என்பவர் தவணையை வசூலிக்க சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த காளீஸ்வரியின் மகன் பட்டு ராஜா ஜேசுராஜை அவதூறாக பேசி கையால் தாக்கியுள்ளார். 


இது குறித்து ஜேசுராஜ் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து போலீசார் பட்டுராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் சதம் அடித்த சின்னவெங்காயம்... இல்லத்தரசிகள் கவலை!

டூவீலர் மீது டிராக்டர் மோதி 2 பெண்கள் படுகாயம்!

  • Share on