
ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இளைஞர்கள் மற்றும் மாற்றுக் கட்சி சேர்ந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அவர்களுக்கு மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் சால்வை அணிவித்து வரவேற்றார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆலோசனைப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகளை மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதியில் மீனவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான மக்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இளைஞர்கள், இளம்பெண் மற்றும் பொதுமக்கள் மற்றும் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் சால்வை அணிவித்து வரவேற்று கட்சியில் இணைத்தார்.
அப்போது, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என அவர்களிடம் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கேட்டுக் கொண்டார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதியிலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.