
தூத்துக்குடியில் மினி டைடல் பூங்கா கட்டடத்தினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.
தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை, சத்யா நகர் மேம்பாலம் அருகே ரூ.ரூ.32½ கோடி செலவில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ( டிச.,29 ) திறந்து வைத்தார்.
பல்வகை உணவுக் கூடம், வாகன நிறுத்துமிடம், உடற்பயிற்சிக் கூடம், கலையரங்கம், தடையற்ற மின் வசதி உள்ளிட்ட வசதிகளுடன் இந்த மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மினி டைடல் பூங்கா மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.
இந்நிகழ்வில், கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.