• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் பலி!

  • Share on

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். 


தூத்துக்குடி மாவட்டம், முக்காணி மணி நகரைச் சேர்ந்தவர் சேர்மபாண்டி மகன் குணசேகர் (23). இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், நேற்று காலை வேலைக்கு வழக்கம் போல செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் . சென்று கொண்டிருந்த போது, துறைமுகம் - மதுரை பைபாஸ் ரோட்டில் சர்வீஸ் ரோட்டில் பின்னால் வந்த ஒரு டிப்பர் லாரி இவரது பைக் மீது மோதியது.


இதில் பலத்த காயமடைந்த அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தெர்மல் நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, டிப்பர் லாரியை ஓட்டி வந்த நெல்லை கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த சுப்ரமணியன் மகன் ஆறுமுகம் (23) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.... தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றம்!

நடுரோட்டில் அரிவாள் வெட்டு... துணிந்து காப்பாற்றிய போலீசாருக்கு தூத்துக்குடி எஸ்பி பாராட்டு!

  • Share on