
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி காவல்துறையினர் ரோந்து மேற்கொண்டதில் நேற்று ஒரே நாளில் தூத்துக்குடி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை செய்பவர்கள் உட்பட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து ரோந்துப்பணி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அனைத்து உட்கோட்ட காவல்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் நேற்று (27.12.2024) ஒரே நாளில் தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக தென்பாகம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் மற்றும் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு என 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து லாட்டரி நம்பர்கள் எழுதி வைக்கப்பட்ட சீட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தீவிரமாக கண்காணித்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.